திருநெல்வேலி மாநகராட்சி பள்ளி வளாகம், வகுப்பறை ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி...






தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் அவர்கள் உத்தரவின்பேரில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகம், வகுப்பறை ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.