மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து டெல்லி சென்றுவந்த 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலம் முற்றிலும் தனிமைபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலப்பாளையத்திற்குள் செல்லும் அணைத்தது பாதைகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு கூடுதலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவேண்டும், தெருவுக்குள் சென்று துப்புரவு பணிகளை செய்ய நிர்பந்திக்கக்கூடாது , பணிநேரம் குறைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தது அங்கு வந்த மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பரிமளா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் அறிவுரையின்படி துப்புரவு பணியாளர்களுக்கு கூடுதல் முகக்கவசம், கையுறைகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் காலை 6 மணி முதல் 11 மணிவரை பணி செய்தால் போதும் என்றும், தெருக்களின் முகப்பு பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து குப்பைகளை சேகரிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினார்.