144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட சலூன் கடைக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை ...



நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் மேலப்பாளையம் நேதாஜி சாலையில் 144 தடை உத்தரவை மீறி சலூன் கடை செயல்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு மேலப்பாளையம் மண்டல ஆணையாளர் சுகி பரிமளா தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் விரைந்துசென்றனர். அப்போது அங்கு 144 தடை உத்தரவை மீறி சலூன் கடை திறந்துசெயல்படுவதைக்கண்டு அந்தக் கடையை பூட்டி சீல்வைத்தனர்.

இதேபோல் அம்பை ரோட்டில் திறந்து செயல்பட்ட மற்றொரு சலூன் கடைக்கும் சீல்வைக்கப்பட்டது.


என்.ஜி.ஓ.பி காலனியில் திறந்து செயல்பட்ட மற்றொரு சலூன் கடைக்கும் சீல்வைக்கப்பட்டது.