சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம் (SOP) சார்பில் பொது தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி






சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம் (SOP) சார்பாக பர்கிட் மாநகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து அரசு
பொது தேர்வு மற்றும் உயர்கல்விக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி? என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஜோதிமணி அவர்கள் தலைமை உரையாற்றினார். சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரி ஆங்கில துறை
பேராசிரியர். முனைவர். யூனுஸ் அகமது முகம்மது சரீப் சிறப்புரை ஆற்றினார். SOP ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். முனைவர். முகம்மது ரில்வான் நன்றி கூறினார். SOP மேலாளர் முகம்மது ராசிக் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.