top of page

தூய்மைப் பணியில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி NCC மாணவா்கள்...






பாளையங்கோட்டை 5 தமிழ்நாடு பட்டாலியன் NCC பயிற்சி மையம் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி NCC அணி மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் NCC அணிகள் சார்பாக பாளை பகுதிகளிலுள்ள வீதிகளில் தூய்மை இந்தியா விழிப்புணா்வுப் பேரணி, நெல்லை நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு மண்டப வளாகம், சிலை மற்றும் நெல்லை ஆவின் பூங்கா சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரணியை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் முனைவர் முகம்மது சாதிக் மற்றும் 5 தமிழ்நாடு NCC பயிற்சி மைய அதிகாரி லெப்டினன்ட் கா்னல் தினேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனா். பேரணி கல்லூரி வாயிலில் துவங்கி நெல்லை ஆவின் வளாகம் வரை சென்றது.


இந்நிகழ்ச்சியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி துணை முதல்வா் முனைவா் செய்யது முகம்மது காஜா, NCC அதிகாரி லெப்டினன்ட் முனைவா் செய்யது அலி பாதுஷா, கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி பொறுப்பு NCC அதிகாரி சபரிநாதன் 5 தமிழ்நாடு பட்டாலியன் சுபேதார் மேஜா் ராஜேஷ், நாயக் சுபேதார் ராவ் மற்றும் ஹவில்தார் அயோத்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.


இந்நிகழ்ச்சியில் திரளான தேசிய மாணவா் படை மாணவா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மூத்த NCC மாணவா்கள் சீனியா் அன்டா் ஆபிசா் சௌந்தா்ராஜ், அன்டா் ஆபிசா், வேதராஜ குரு, ஷேக் இப்ராஹிம் சிராஜுதீன், கலாவதி, மகேஷ் மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரி மூத்த NCC மாணவா்கள் சீனியா் அன்டா் ஆபிசா் ரத்தினகுரு, அன்டா் ஆபிசா் பத்மராஜ் மற்றும் யோக பரமேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனா்.

23 views0 comments
bottom of page