பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இரத்த தானம் மற்றும் கண் சிகிச்சை முகாம்...
பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இரத்த தானம் மற்றும் கண் சிகிச்சை முகாம்

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அன்னை வேளாங்கன்னி இரத்ததான மற்றும் இரத்தக் கூறுகள் மையம் மற்றும் நெல்லை ஐ பவுண்டேசன் இணைந்து இரத்த தான மற்றும் கண் சிகிச்சை மருத்துவ முகாம் இன்று (07.10.2021) கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது . இம்முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி அரசுதவி பெறா பாடப்பிரிவுகளின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ செய்யது முகம்மது காஜா வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ஜெத்தையா ஜேசுதாசன் மற்றும் கண் சிகிச்சை மருத்துவர் முகம்மது பைசல் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றினார்கள்.மேலும் இந் நிகழ்வில் மாணவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு ஹீமோகுளோபின் அளவு கண்டறியபட்டதோடு கண் பரிசோதனையும் நடைபெற்றது. இம் முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தை சார்ந்த 50 மாணவர்கள் இரத்ததானம் அளித்தனர்.
முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பி. ஜெஸ்லின் கனக இன்பா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர். அப்துர் ரஹ்மான் முனைவர். ஜெமி மெர்லின் ராணி பேரா.சாகுல்ஹமீது முனைவர். மாரியம்மாள் மற்றும் பேரா.முகைதீன் பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்