பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிபாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை சார்பில் ஊழலுக்கெதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி இன்று (22.02.2021) காலை 11 மணியளவில் கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற்றது. நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் ஜெஸ்லின் கனக இன்பா அனைவரையும் வரவேற்றார்.


கல்லூரி முதல்வா் முனைவா் மு. முகம்மது சாதிக் அவா்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வா் முனைவா் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறையின் ஆய்வாளா் ராபின் ஞானசிங் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.


இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறையின் துணை கண்காணிப்பாளா் திரு. மெக்லரைன் எஸ்கால் அவா்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி உரையாற்றியதோடு மாணவா்களுக்கான சந்தேகங்களை கேள்வி பதில் நிகழ்ச்சி மூலமாக தெளிவுபடுத்தினார். மேலும், இந்நிகழ்ச்சியில் சென்னை இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநா் திரு. ஜெயந்த் முரளி அவா்களின் வழிகாட்டுதலின்படி இலஞ்ச ஒழிப்பு வாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வை முன்னிட்டு மாநில அளவில் “விழிப்பான இந்தியா – செழிப்பான இந்தியா” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் இரண்டாமாண்டு வேதியியல் மாணவி பீா் பாத்திமா மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். அவருக்கு கல்லூரியின் முதல்வரும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையின் துணை கண்காணிப்பாளா் திரு. மெக்லரைன் எஸ்கால் அவா்களும் பாராட்டி சான்றிதழும் கேடயமும் வழங்கிச் சிறப்பித்தனா்.


இந்நிகழ்ச்சியை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் ஜெமி மொ்லின் ராணி அவா்கள் தொகுத்து வழங்கினார். மேலும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் பேரா. சாகுல் ஹமீது, முனைவா் அப்துல் ரஹ்மான், பேரா. மைதீன் பிள்ளை ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேரா. மாரியம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

76 views0 comments