பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்திற்கு அரிய நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்திற்கு அரிய நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி 4.05.2021 காலை 11 மணியளவில் ஆட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம். ஷேக் அப்துல் காதர் 70 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய 175 இஸ்லாமிய இலக்கிய நூல்களைக் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல். கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹூசைன் துணை முதல்வர் டாக்டர் செய்யது முஹம்மது காஜா, தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ச.மகாதேவன், அரபுத்துறைத் தலைவர் டாக்டர் உபயதுல்லா, கல்லூரி நூலகர் டாக்டர் ஆர்.ஆர்.சரவணகுமார், நிர்வாக அலுவலர் டாக்டர் பி.ஏ. அப்துல் கரீம், கல்லூரிப் பொறியாளர் அல்ஹாஜ் ஆதம் ஆகியோர் கலந்து கொண்டனர்