சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம்(SOP) மூலம் கபசுர பொடி வழங்கும் நிகழ்ச்சி...


கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்
பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி *சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம்(SOP)* மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சித்த மருத்துவ முறையால் உருவாக்கப்பட்ட கபசுர பொடி வழங்கும் நிகழ்ச்சி பர்கிட் மாநகரத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 100 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கபசுர பொடி மற்றும் அதை எவ்வாறு காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது அடங்கிய துண்டுப் பிரசுரங்களை
SOP மேலாளர். முகம்மது ராசிக் அவர்கள் வழங்கினார். SOP
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். முனைவர்.முகம்மது ரில்வான் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.