சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் "புதுமையான முறையில் சந்தைக்கேற்ப உற்பத்தி செய்தல்” சொற்பொழிவு

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு சார்பில்
“புதுமையான முறையில் சந்தைக்கேற்ப உற்பத்தி செய்தல்”
என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு
திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் “புதுமையான முறையில் சந்தைக்கேற்ப உற்பத்தி செய்தல்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு (இன்று) 2021 பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. முகம்மது சாதிக் அவா்கள், தலைமை தாங்கித் தலைமையுரை ஆற்றினார். துணை முதல்வா் முனைவா் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையின் திட்ட இயக்குநா் திரு. மைக்கிள் அந்தோணி பொ்னண்டோ அவா்கள் கலந்து கொண்டு, மாணவா்கள் படிக்கும் காலத்திலேயே புதிய சிந்தனையினை வளா்த்து இவ்வுலகில் தன் திறமைகளை நிலைநாட்டுபவா்களாக வளர வேண்டும் என்று மாணவா்களுக்கு தன்னம்பிக்கை உணா்வினை ஊட்டினார். முன்னதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவா் ப. கீதா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியை திருமதி. யோகாசினி நன்றி கூறினார். மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி அகமது சஃபானா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். பேராசிரியா்கள், மாணவா்கள் என பலா் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.