தோ்தல் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி...




பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம்(SOP) சாா்பாக தோ்தல் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி, செய்துங்கநல்லூா் கிராமத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கிராம நிா்வாக அலுவலா் திரு. சக்தி அவர்கள் தொடங்கி வைத்தாா்கள். வரலாற்றுத் துறைப் பேராசிாியா் முனைவா் ஏ. அப்துல் அஜீஸ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவா்கள் கலந்துகொண்டு பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மூலம் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தியான அனைத்து மக்களும்
தங்களது வாக்குகளை வாக்களிப்பதன் மூலம்
நிறைவேற்றுமாறு விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு. முகம்மது ரில்வான் மற்றும் திட்ட மேலாளா் திரு. மு. முகம்மது ராசிக் ஆகியோா் சிறப்பாக செய்திருந்தனா்.