top of page

சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம்.





தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலக பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தநிலையில் 55 நாட்களுக்குப்பிறகு கடந்த மே18ம் தேதி ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன்படி அன்றுமுதல் அரசு அலுவலகங்கள் இயங்கத்தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் வாகனங்களுக்கான FC, licence உள்ளிட்ட பணிகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.


நெல்லையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு ஒரே ஒரு வாயிலின் வழியாக அன்றையதினம் ஓட்டுனர் உரிமம், வாகன தகுதி சோதனை ஆகியவற்றிற்காக ஆன்லைனில் ஒவ்வொரு பிரிவிலும் அனுமதிபெறப்பட்ட 10 வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. உள்ளே வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அனிந்திருக்கவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

14 views0 comments
bottom of page