திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணி...






சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் முருகன் குறிச்சி மின் பாதையில் நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணி இன்று காலைமுதல் நடைபெற்றுவருகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மின்சார வயர்களையும் மின் கம்பங்களையும் மாற்றி அமைப்பது சிரமமானது என்றபோதும் மின்வாரிய பணியாளர்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். மேலும் இந்த பணி நடைபெறும்பகுதியில் போக்குவரத்தை வேறுபாதைகளில் மாற்றியமைத்து நெல்லை மாநகர காவல்துறையினரும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள்.