32 - வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி...







32 - வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருடந்தோறும் தேசிய சாலை பாதுகாப்பு
மாத விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து 32வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு பாதுகாப்பு பேரணியை திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு சந்திரசேகர் முன்னிலையில் *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப* கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், பொதுமக்களின் வாகனங்களின் முன்பக்க முகப்பு விளக்குகளில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் எதிரே வரும் வாகனங்களுக்கு கண் கூசாமல் இருக்க கருப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டி,
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து விபத்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் திருநெல்வேலி மாவட்ட பெண் காவலர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மேலும் பேரணி மாவட்ட ஆயுதப்படையில் துவங்கி முன்னீர்பள்ளம் வரை பயணம் செய்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிசில், ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு கணபதி,
வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் திரு. ராஜேஷ், திருமதி. பாத்திமா பர்வீன், வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி. செண்பகவள்ளி, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு. பூமிபாலன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முத்துராஜ் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.