நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு








18.01.2021 முதல் 17.02.2021 வரை 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து உட்கோட்டங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் தினமும் விழிப்புணர்வு தொடர்ந்து மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் அறிவுரையின்படி ஊரக உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் சார்பில்பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் வாகன ஓட்டிகளுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாட்டுப்புற கலைகள் மயிலாட்டம், கரகாட்டம் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் சாலை விழிப்புணர்வு குறித்து பதாதைகளை ஏந்தி பேரணியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பின் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரதா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் வைத்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாற்கர சாலையில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என்று விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தினார்கள். மேலும் சாரதா கல்லூரி பெண்கள் வாகன ஓட்டிகளுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு பாலகிருஷ்ணன் ஊரக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திரு நாககுமாரி மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.