top of page

நெல்லை மாநகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்...













நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுவதையடுத்து பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. இதனால் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல பகுதிகளிலும் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குழாய்கள் படிதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மழைநீர் தேங்கி பெரும் ஆபத்தை விளைவிக்கும் பள்ளங்களாக காட்சியளிக்கிறது. மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ கார் ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் மாநகர பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தை சேர்ந்த என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் சிரமப்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் என்.ஜி.ஓ. பி காலனி மக்கள் நலச்சங்க இணைச்செயலாளர் T. சரவாணன் உடன் இணைந்து அந்த குழிகளை தாங்களாகவே முன்வந்து மண் நிரப்பி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் தங்களது வாகனங்கள் அடிக்கடி பழுதாவதாகவும், எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குழிகளை முறையாக மூடி சாலைகளை சீரமைத்துத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

28 views0 comments