top of page

தேர்தல் அன்று மூதாட்டியை தோளில் தூக்கி சென்று வாக்களிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளருக்கு SP பாராட்டு




தேர்தல் அன்று மூதாட்டியை தோளில் தூக்கி சென்று வாக்களிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளரரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்



திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது 09.10.2021 அன்று வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கனாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்த வயதான மூதாட்டியை மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.செய்யது நிஷார் அகமது அவர்கள் தனது தோளில் சுமந்துகொண்டு வாக்களிக்க உதவி செய்தார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு காவல்துறை மக்களின் நண்பன் என்பதை நிரூபித்து காட்டியதை மக்கள் அனைவரும் பாராட்டினார்கள்.


இச்செயலைக் கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்., இ.கா.ப அவர்கள், மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.செய்யது நிஷார் அகமது, அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.

9 views0 comments
bottom of page