top of page

நெல்லை மேலப்பாளையம் ரிலைன்ஸ் சந்திப்பில் மாஸ்க் அணியாமல் வந்தவரால் பரபரப்பு..




ரிலைன்ஸ் சந்திப்பு பகுதியில் இன்று காலை 11.45க்கு இருசக்கரவாகனத்தில் வந்த ஒருவர் மாஸ்க் அணியாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்து சென்றதால் அவரை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றவார்கள் தடுத்து நிறுத்தி மாஸ்க் அணிந்து செல்லுமாறு கூறினர். அதற்கு அந்த நபர் தான் ஒரு தன்னார்வலர் என்றும் ஹெல்மட் அனிந்திருப்பதால் மாஸ்க் அனியமாட்டேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கண்டிப்பாக மாஸ்க் அணியவேண்டும் என்று வலியுத்திய காவல்துறையினர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தனது இருசக்கரவாகணத்தில் அதிவேகமாக தப்பிசெல்லமுயன்றார். அவரை தடுத்து நிறுத்தி இருசக்கரவாகணத்தை காவல்நிலையத்துக்கு கொண்டுசென்றனர். இதற்குள் அந்தநபர் போன் செய்து தனது ஆதரவாளர்களை அங்குவரச்சொன்னவுடன் அங்குவந்தசிலர் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், முன்னாள் இரானுவத்தினர் மற்றும் தன்னார்வலர்களை தரக்குறைவாகபேசியதுடன் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்குவந்த காவல் துறை அதிகாரிகள் அவர்களை கலைந்துசெல்ல அறிவுறுத்தியதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தபகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலாக பணியாற்றிவரும் காவலர்களை பொறுப்பின்றி பொதுமக்கள் மிரட்டுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்ப்படுத்தியுள்ளது.

62 views0 comments
bottom of page