top of page

கோவில்பட்டியில் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்...






கோவில்பட்டி போக்குவரத்து காவல்துறை,கோவில்பட்டி ஜே.சி.ஐ, சார்பில் திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி பசுவந்தனை சாலையில் வைத்து நடைபெற்றது.



ஆறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக மார்கழி தை மாதங்களில் விருதுநகர் தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து கோவில்பட்டி வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும். ஆன்மீக பயணம் சிறப்பாக அமைவதற்கும் வசதியாக ஒளிரும் சிவப்பு நிற ஸ்டிக்கர் ஸ்டிக் வழங்கியும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாராயணன்,கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் முரளி கிருஷ்ணன்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் போக்குவரத்து காவலர் பெருமாள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

22 views0 comments
bottom of page