மின் பாதுகாப்பு சாதனம் (RCCD) பொருத்தி மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம்...




தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாக கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மாஞ்சோலை வினியோக பிரிவு க்கு உட்பட்ட பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் சாதனங்களை கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் மின் பாதுகாப்பு சாதனம் ( RCCD ) பொருத்தி மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.ஊத்து எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மின் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் ( நோட்டீஸ்) வழங்கி விளக்கிக் கூறப்பட்டது இதில் இளநிலை மின் பொறியாளர் மாதவன் பஞ்சாயத்து கவுன்சிலர் ஸ்டாலின் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் கந்தசாமி கண்ணன் ராஜ் அனந்த ராமகிருஷ்ணன் ராமையா கலந்து கொண்டனர்..