200 ஏழைகளுக்கு நோன்பு பெருநாள் உதவி - இர்ஃபானுல் ஹுதா டிரஸ்ட் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது



மேலப்பாளையம் விரிவாக்க பகுதியில் அமைந்துள்ள கரீம் நகர் பகுதி மக்களுக்கு இர்ஃபானுல் ஹுதா டிரஸ்ட் சார்பாக வருடம் தோறும் ஏழை மக்கள் சந்தோஷமாக நொன்பு பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் வழங்குவது வழக்கம் அந்தஅடிப்படையில் இந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் 200 ஏழைகளுக்கு
700 ரூபாய் மதிப்புள்ள 22 வகையானா வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் (அரிசி,பருப்பு,நெய்,என்னய்,சீனி, தேயிலை, மசாலா பொடி) உள்ளடங்கிய 200 ரமலான் கிட் வழங்கப்பட்டது
கரீம்நகர் மஸ்ஜிதுல் ஹுதாவில் நிர்வாகிகள் கே.எஸ்.சாகுல்ஹமீது உஸ்மானி, ஜாபர் ஆலிம்,எம்.எஸ்.ஜைய்னுல் ஆப்தீன், முஸ்தபா, ஆகியோர் வழங்கினர்