கயத்தார் அருகே காசநோய் கண்டறியும் முகாம்...






தேசிய காசநோயகற்றும் திட்டம் *கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக* துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசம்) க.சுந்தரலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கயத்தார் அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் *நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்* மற்றும் காசநோய் பணியாளர்கள், *அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு ஒவ்வொரு வீடு வீடாக சென்று* வீட்டில் உள்ள நபர்கள் அனைவருக்கும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்பது பற்றி கேட்டறியபட்டது மேலும் காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக *கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது* மேலும *இனை நோய் (சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கபட்டனர்*. மேலும் இந்த முகாமில் *கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய காசநோயாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கபட்டது* இதனை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *காசி விஸ்வநாதன்* வழங்கினார் இந் நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் *பெரியசாமி* பஞ்சாயத்து தலைவர் *ஆறுமுகச் சாமி* , மற்றும் பஞ்சாயத்து அலுவலர் *குமார்* மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்