திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கோட்.

தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கோட் வழங்க திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கோட் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ கலந்துகொண்டார்...