ஸ்ரீராகவேந்திர குரு ஸ்தோத்திர பாராயணம் . பக்த சங்கம திருவிழா நெல்லையில் நடந்தது .




வீடியோ பார்க்க லிங்க் ---
https://youtu.be/aUsa43TsMJU
நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் என்னும் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் அமைந்துள்ளது . இங்கு 1008 பக்தர்களை கொண்டு ஸ்ரீராகவேந்திர குரு ஸ்தோத்திர சமஸ்டி பராயணம் நடைபெற்றது . இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பு மக்களும், ராகவேந்திரா பக்தர்களும் கலந்துகொண்டு அருள் பெற்றனர் . கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பராயண நிகழ்ச்சி நடைபெறவில்லை . முதலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் மங்கள ஆரத்தி நடைபெற்றது பின்னர் விக்னேஷ்வர பூஜை சங்கல்பம் அதன்பின்னர் ராமகிருஷ்ண சமாவெளி ஆஞ்சநேயர் தியான சுலோகங்கள் ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்திர பாராயணம் அஷ்டோத்திர அர்ச்சனை நைவேத்தியம் தீபாராதனை போன்றவைகள் நடைபெற்றது பின்னர் மங்கள மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது . அதன் பின்னர் பக்தகோடிகளுக்கு சிறப்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .