இராதாபுரம் ஒன்றியத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு திமுக சார்பில் உதவி






தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த இராதாபுரம் ஒன்றியம் திசையன்விளை பகுதியைச் சார்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள்,தையல் தொழிலாளர்கள்,தச்சுத்தொழிலாளர்கள்,பூக்கடை தொழிலாளர்கள், நகைத்தொழிலாளர்கள்,சலவைத் தொழிலாளர்கள்,சவரத் தொழிலாளர்கள் ஆகிய 600 குடும்பங்களுக்கு அரிசி,சமையல் பொருட்கள்,எண்ணெய் உள்ளிட்ட நிவாரணத் தொகுப்பினை திமுக வர்த்தக அணி மானில இணைச்செயலாளரும்,திருநெல்வேலி மாவட்ட ஊராட்சியின் முன்னாள் தலைவருமான ம.கிரகாம்பெல் வழங்கனார்.நிகழ்ச்சியில் இராதாபும் ஒன்றி திமுக செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் மி.ஜோசப்பெல்சி,திசையன்விளை பேரூர் செயலாளர் டிம்பர் டி.செல்வராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் முரளி,ஞானராஜ்,வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளிகளின் தாளாளர் திவாகரன்,முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் அப்புவிளை வி.எஸ்.ஆர்.சுரேஸ்,பட்டர்புரம் முத்துப்பாண்டி,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை செயலாளர் தங்கையா.கணேசன்,திசையன்விளை அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சாந்தகுமார்,அரிமா முன்னாள் ஆளுனர் சுயம்புராஜன்,திசையன்விளை பாலசுப்பிரமணியன், கே.டி.பி.ராஜன்,கண்ணன்,நெல்சன்,நசுருதீன்,க.புதூர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.