புளியங்குடியில் மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களு க்கான குடும்பநல சிகிச்சை முகாம்...


தென்காசி மாவட்ட மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை என்.எஸ்.வி.இருவாரவிழா 2022 விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று (17.12.2022) புளியங்குடி ஆறுமுக டெக்ஸ்டைல்ஸ் தொழில்சாலையில் நடைப்பெற்றது.
திருநெல்வேலி மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன் வரவேற்புரை யாற்றினார்.
மருத்துவம் ஊரக நல பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் இராமநாதன், தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
ஆறுமுகம் டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் தொழில்சாலை மேலாளர் கருப்ப ஞானியார் , முன்னிலை வகித்தார்.
வாசுதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய
வட்டார மருத்துவர் சாந்தி சரவணபாய்,
மாவட்ட விரிவாக்க கல்வியாளர்
டேவிட் ஞானசேகர், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் உற்பத்தி மேலாளர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராம்குமார், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட
100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, நன்றியுரை வழங்கினார்.