65 நாட்களுக்குப் பிறகு நெல்லையில் இன்று பேருந்துகள் இயக்கம்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கடந்த 65 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்த இன்று 01.06.2020 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும், டவுன் பொருட்காட்சி திடலில் இருந்து நகரப் பேருந்துகளும் காலை முதல் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயங்காது என
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் நெல்லையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று
பேருந்துகள் இயக்கப்படவில்லை.



News sponser : https://lapureherbals.in/
