பாளை அழகியமன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில் தேரோட்ட நாளில் 19.03.2022 மின்தடை அறிவிப்பு...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி (நகர்புற விநியோகம்)
செயற்பொறியாளர் முத்துக்குட்டி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
33/11KV சமாதானபுரம் துணை மின் நிலையப்பகுதிக்கு உட்பட்ட பாளை
அழகியமன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் 19.03.2022 அன்று
நடைபெறவுள்ளதால் காலை 7 மணி முதல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு
மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
பாளையங்கோட்டை பெருமாள் கோவில் மேல
ரதவீதி, கீழரத வீதி, வடக்கு ரத வீதி, தெற்கு பஜார், கோபாலசுவாமி கோவிலை சுற்றியுள்ள
வீதிகள், செண்பகவன தெரு, சிவன்கோவில் நான்கு ரதவீதிகள், காய்கறி கடைத்தெரு,
சிவன் கோவில் தெற்கு மாடவீதி மற்றும் பட்டு பிள்ளையார் கோவில் தெரு.