தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பில் பொதிகை நகர் பூங்கா தூய்மைப்படுத்தும் பணி


மகாத்மா காந்திஜியின் பிறந்த நாளையொட்டி தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பில் பாளையங்கோட்டை பொதிகை நகர்ப்பகுதியில் உள்ள பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த தினத்தை தேசத்திற்காக உடலுழைப்பு தானம் செய்யும் தினமாக அறிவித்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் திரு .கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் . தூய்மை பாரத இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு .அகிலாண்டம் அவர்களும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ராம்பாபு அவர்களும் மற்றும் அந்தப் பகுதியில் வசிக்கும் ஏராளமான இளைஞர்கள், பெரியவர்கள், தாய்மார்கள்,
சிறுவர் - சிறுமியர்கள் கலந்து கொண்டு பூங்காவை தூய்மைப்படுத்தி தங்களுடைய உடல் உழைப்பை தேசத்திற்காக தானமாக அளித்தார்கள். மாநகராட்சி அதிகாரிகளும் தூய்மை பாரத இயக்கத்தினரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் .