உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி





திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் த பிரவீன் குமார் அபினபு அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா,அவர்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி, பயிற்றுவிக்கப்பட்டது.
மேலும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் கொரோனா நோய் தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.