பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்




திருநெல்வேலி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் *170 பெண் காவலர்களுக்கான* பயிற்சியை *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பயிற்சிப் பள்ளி முதல்வர் திரு ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப* அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். புதிதாக காவல்துறையில் பணியாற்ற காத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதோடு, காவல்துறையில் அனைவரும் *முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம். பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும், முதன்மைக் கவாத்து போதகர் மற்றும் முதன்மை சட்ட போதகர் கற்றுக்கொடுக்கும் பாடங்களை நன்கு கவனித்து செயல்பட வேண்டும் எனவும் பணியில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியின் போது அனைவரும் முக கவசம், கையுறைகள் அணிய வேண்டும்* எனவும் *தனிமனித இடைவெளியை* கடைபிடிக்க வேண்டும் எனவும் தினமும் தங்கள் உடைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் பயிற்சி காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். *இந்நிகழ்ச்சியில் காவலர் பயிற்சி துணை முதல்வர் ராஜ்குமார், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிசில் மற்றும் முதன்மை கவாத்து போதகர் திருமதி மகேஸ்வரி மற்றும் முதன்மை சட்ட போதகர் பிலோமினா அவர்கள் கலந்து கொண்டனர்.*