கொரோனா குறித்து பொதுமக்களிடையே அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று...




கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க பொதுமக்களிடையே அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தற்போதைய சூழலில் தேவையான ஒன்றாக உள்ளது .
இந்நிலையில் பொதுமக்கள் வரக் கூடிய அலுவலகங்களிலும் அதனை பின்பற்ற வேண்டும் என்பதால் நெல்லை மாநகர காவல் நிலையங்களில் , கை கழுவ வாஷ்பேசின், சானிடைசர் , இலவச மாஸ்க், என அனைத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது . மேலும் சமூக இடைவெளியை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸடர்களும் வைக்கப் பட்டுள்ளது.
சிறப்பான முறையில் இவற்றை அமைத்த டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார், தச்சநால்லூர் ஆய்வாளர் வனசுந்தர் ஆகியோருக்கு பாராட்டுகள்.
விழிப்புணர்வை விதைப்போம்.
விரைவில் கொரோனாவை விரட்டுவோம்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்