தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு...


திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை பணிக்கு துறை ரீதியான ஆண்கள் விண்ணப்பதாரர்கள் 7,321 நபர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 7,322 விண்ணப்பித்திருந்தனர். *இதில் இன்று நடைபெற்ற தேர்விற்கு ஆண் விண்ணப்பதாரர்களில் 7,321 நபர்களில் 6,052 நபர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6,053 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர் 1,268 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.