திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம்...
தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை, கல்லூரி மாணவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரோட்டில் உள்ள சாரதா கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை சாரதா கல்லூரி மாணவி மூலமாக 01.03.2023 இன்று ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது.
பின்னர் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்தராஜ் அவர்கள் குத்துவிளக்கேற்றியும், மரக்கன்றுகளை நட்டு வைத்து புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு காவலர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொது மக்களின் பாதுகாப்பு கருதியும், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு கருதியும் தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது எனவும், இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும், இந்த புறக்காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. கனகராஜ் அவர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், சாரதா கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.