top of page

காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளின் புதல்வர்கள் இனைந்து வழங்கிய நலத்திட்ட உதவிகள்...







முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது மாநகர ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளின் புதல்வர்கள் ஒன்று சேர்ந்து காவலர்களிடம் பணம் வசூல் செய்து தினமும் 500 பேருக்கு உணவு சமைத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரானா இல்லாத மற்ற நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு பார்சலில் உணவு கொடுத்தனர்(மொத்தம் 35 நாட்கள் ) இதில் ஒரு சில காவல் உயர் அதிகாரிகள் 5000 ரூபாய் வரை கொடுத்து உதவினர். அவர்கள் கொடுத்த பணத்தில் 18000மீதி உள்ளது. மீதி உள்ள பணத்தில் மளிகை சாமான்கள் வாங்கி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள துப்புறவு பணியாளர்கள் மற்றும் கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.. காவலர்களின் புதல்வர்கள் சார்பாக ரூபாய் 25000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை ஆயுதப்படையில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்கள், கோயில் அர்ச்சகர், முடி திருத்தும் பணியாளர்களுக்கு மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, மாவட்ட ஆயுதப்படை உதவி கண்காணிப்பாளர் சிசில், மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ்வரி ஆகியோர் வழங்கினர், இதில் உதவி ஆய்வாளர்கள் கண்ணதாசன், பூமி பாலன், காவலர்கள் குமார், சிவகுமார், மற்றும் காவலர்களின் புதல்வர்கள் மூர்த்தி, பீபி , முத்துராஜ், மகாராஜன், பிரபு தங்கதுரை, ரமேஷ், வழக்கறிஞர் பாலாஜி / நிகழ்ச்சி ஏற்பாடு . நீதித்துறை ராஜா, லெட்சுமணன், வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்...

5 views0 comments
bottom of page