top of page

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு உதவித்தொகை...



*திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதி தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.*


கடந்த 19.08.2019 அன்று பத்தமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த *சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுடலைமுத்து* என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதே போன்று நாங்குநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த *இரண்டாம் நிலை காவலர் திரு. ஆறுமுகம்* அவர்கள் 29.11.2019 அன்று விபத்தில் காலமானார். மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம்* வழங்கப்பட்டுள்ளது.


இன்று (30.09.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுடலைமுத்து என்பவரது குடும்பத்திற்கும், இரண்டாம் நிலை காவலர் திரு. ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப.,* அவர்கள் வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

11 views0 comments
bottom of page