top of page

நெல்லையில் காவலர் வீரவணக்க நாள்...



1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.


திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில், 21-10-2020-ம் தேதியன்று, காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக்.மோ டாமோர் (இ.கா.ப) அவர்கள், திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் திரு.பிரவீன்குமார் அபிநபு (இ.கா.ப) அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் (இ.கா.ப) அவர்கள், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுணசிங் (இ.கா.ப) அவர்கள், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.மகேஷ்குமார் (இ.கா.ப) (குற்றம் மற்றும் போக்குவரத்து) அவர்கள், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், நெல்லை மாநகர CCRB ADC திரு.வெள்ளத்துரை அவர்கள், சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு பிரதீப் இ.கா.ப அவர்கள், ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து, 72 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.







4 views0 comments
bottom of page