பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ,போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.


திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், IPS., அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியிருந்தார். இதன் படி வி.கே.புரம் பகுதியில் உள்ள அமலி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திருமதி.சீதாலெட்சுமி, அவர்கள் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க 181,1098, என்ற இலவச உதவி எண்களை அழைக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.