top of page

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.



*திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கிராம பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம், காவல் உதவி செயலி பற்றி தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.*


அதன்படி இன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கோடாரங்குளம் பகுதியில் உள்ள சேனை தலைவர் மண்டபத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு *காவல் ஆய்வாளர் திருமதி.மீராள்பானு, அவர்கள்* மற்றும் காவல்துறையினர் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் *181* குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க *1098* என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், *காவல் உதவி செயலி* மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

6 views0 comments
bottom of page