திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு மருத்துவர் பிளாஸ்மா தானம்..

கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அல்லது வீட்டில் தனிமைபடுத்துதலை நிறைவுசெய்து பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளிலிருந்து 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். பிளாஸ்மா என்பது ரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம். பிளாஸ்மா சிகிச்சை முறையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மா, கொரோனா வைரஸ் நோயாளிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போதைய ஆய்வில் கொரோனாவிலி௫ந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துவதன் மூலம் அந்நோயிலி௫ந்து விடுபடலாம் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்ப்படுத்திவருகிறது...
இந்தநிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு படித்து வரும் டாக்டர் முருகன் நேற்று பிளாஸ்மா தானம் செய்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் முருகன் இயற்கையிலேயே பிறருக்கு உதவும் குணம் படைத்தவர்.பிளாஸ்மா தானம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் மருத்துவராகிய அவர் பிளாஸ்மா தானம் செய்திருப்பது பொதுமக்களை பிளாஸ்மா தானம் செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது. அவர் பிளாஸ்மா தானம் செய்தது மட்டுமல்லாமல் தன்னுடன் பயிலும் சக மருத்துவர்களையும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவித்து வருகிறார். மருத்துவர் ஒருவரே பிளாஸ்மா தானம் செய்கிறாரே எனவே நாமும் தைரியமாக பிளாஸ்மா தானம் செய்யலாம் என்று பொதுமக்களை பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிப்பதாக மருத்துவர் முருகனின் இந்த செயல் அமைந்துள்ளது. இவரது இந்த செயலை மற்ற மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்...