சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்படக் கண்காட்சி...


இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் 12.03.2021 அன்று தொடங்கி 15.08.2022 வரை நடைப்பெறவுள்ளது. அதையொட்டி இந்திய அரசு 75 வாரங்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம, திருநெல்வேலி மற்றும் மாவட்ட அறிவியல் மையம் இணைந்து மாவட்ட அறிவியல் மையத்தில் 24.03.2021 முதல் 26.03.2021 வரை மூன்று நாட்கள் புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதன் துவக்க விழா நிகழ்ச்சியை இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட அறிவியல் அலுவலர் முத்துகுமார், கள விளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப் மற்றும் கள விளம்பர உதவியாளர் போஸ்வெல் ஆசீர் இருந்தனர். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கு. பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் திருநெல்வேலி
மக்கள் தொடர்பு கள அலுவலக
கள விளம்பர அலுவலர் தெரிவித்துள்ளார் .