நெல்லை மாநகராட்சி சார்பில் பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது
குறைந்த நிலத்தில் அதிக மரங்களை அடர்த்தியாக நட்டு, சிறிய காடுகளை உருவாக்க வேண்டும். இத்தகைய மரக்காடுகளால் மட்டுமே மழை மேகங்களை குளிர்வித்து மழைபொழிவைப் பெற்றுத் தரமுடியும். அத்தகைய குட்டி காடுகளை உருவாகித் தரக்கூடிய நல்லதொரு முறை தான் "மியாவாக்கி காடு வளர்ப்பு" (Miyawaki Forest) முறையாகும்.
மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் காடுகளை உருவாக்கத் தேவையானது இரண்டே விஷயம்தான். ஒன்று காலியிடம், இன்னொன்று கழிவுகள், குப்பைகள். இந்த இரண்டும் நம் ஊரில் அதிகம் காண கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினால், எதிர்காலத்தில் மழையீர்ப்பு மையமாக தமிழ்நாடு மாறிவிடும். இதன் அடிப்படையில் தற்பொழுது நெல்லை மாநகராட்சி முழுவது மரக்கன்றுகள் நடும் பணி மாநகராட்சி மூலம் நடந்துவருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பெருமாள்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 200 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமையில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கர், திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன்,சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
,இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் கூறுகையில் திருநெல்வேலி மாநகராட்சி முழுவதும் சுமார் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அதன்படி 4 மண்டலத்திற்கு மரக்கன்றுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு அவற்றை நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்று பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...








News sponser : https://lapureherbals.in/
