top of page

பெருமாள்புரம் தூய தோமா ஆலய வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் கபசுர குடிநீர் முகாம்...










வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்க்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டடுள்ளது.


இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிப்புள்ள மாவட்டங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் கிருமி நாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற நோய்தடுப்பு பணிகளை சுகரதானா அமைப்பின் உயர்கல்வி முதன்மை செயலாளர் அபூர்வா IAS, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கடந்த 8ம்தேதி தொடங்கி வைத்தனர்.


இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்களை நடத்திவருகிறது.


மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பல்வேறு அமைப்புகளும் தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற அளவு இதுபோன்ற கபசுரகுடிநீர் வழங்கும் முகாம்களை நடத்திவருகிறது.


திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட பெருமாள்புரம் தூய தோமா ஆலய வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் பெருமாள்புரம் தூய தோமா ஆலயம் ( St.Thomas Church) முன்பு, என்.ஜி.ஓ. பி காலனி சுடலை கோவில் அருகில் மற்றும் அன்புநகர் ரயில்வே கேட் அருகே ஆகிய மூன்று இடங்களில் நோய்தொற்றை தடுக்கும் விதமாக தினமும் கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது.


இதனை பெருமாள்புரம் சேகரம் தூய தோமா ஆலயம் சேகரத்தலைவர் அருட்திரு முத்துராஜ் தொடங்கிவைத்தார். ஒருங்கினைப்பாளர்கள் சுவிகர்ஜேக்கப், ரூபன்ஜெயசிங், பீட்டர், இணை ஒருங்கினைப்பாளர்கள் வில்பர்ட் , இம்மானுவேல் முத்துசாமி, வின்சென்ட் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டனர். முகாமை மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது பார்வையிட்டார்.

113 views0 comments