பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்கள் பணியில் சேர்ந்தனர்.







நெல்லையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 165 முதல்நிலை பெண்காவலர்கள் இன்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியில் சேர்ந்தனர். திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்காவலர்கள் இன்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து பணியில் சேருமாறு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை முதல் தேர்வானவர்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். அங்கு பணி ஆணை உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு handwash மற்றும் sanitizer வழங்கப்பட்டு கை கழுவ அறிவுறுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.