top of page

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி...


அன்பு என்ற சொல்லின் மூலம் மக்கள் மனதில் அடிக்கல் நாட்டி ...பண்பு என்ற சொல்லில் பணியாற்றி*

என்றும் இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற எங்களின் எழுச்சி நாயகன் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்-உயர்திரு வேல்ராஜ் அவர்களின் திருவளர்செல்வி-பிரித்திகா பிறந்தநாளை முன்னிட்டு சென்ற ஆண்டு கொரானாவிலும் ....தற்போது உள்ள பேரிடர் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு ...கிராமபுற மக்களின் --பசி எனும் கொடிய பிணியை போக்கும் வகையில் இன்று சமத்துவபுரம்,வசவப்பபுரம்,கலியாவூர்,கீழப்புத்தனேரி,பொட்டல்குளம்,மேலப்புத்தனேரி,பாறைக்குளம்,பகுதியை சேர்ந்த சுமார் 70 ஏழை எளிய குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகளும் அரிசியும் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பினர் மூலம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் முறப்பநாடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா ராபர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


மேலும் இந்நிகழ்வில் பசுமை தமிழ் தலைமுறையின் நிறுவனத்தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர்,மகேஷ், கணேசன்,ராஜா,பரமசிவம்,ஆறுமுககனி,பூல்பாண்டி,அழகுமுத்து,சீனிவாசன்,ராம்சங்கர்,பாரதிராஜா,மகாராஜன்,கன்னியப்பன்,நவின்,தங்கபாண்டி,ஆகியோர் கலந்துகொண்டனர்.


பொருட்களை பெற்றுகொண்ட பொதுமக்கள் அன்போடும் கனிவோடும் மிகுந்த நன்றியை தெரிவித்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..


அனைத்து நன்றிகளும் பாராட்டுகளும் இளைஞர்களின் வழிகாட்டி திரு வேல்ராஜ் அவர்களையே சாரும்.


செய்தி: *பசுமை தமிழ் தலைமுறை*



30 views0 comments
bottom of page