கொரோனாவுக்கு எதிரான போரில் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது.
*கொரோனா தொற்று சங்கிலியை உடைப்போம்*
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு





பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு, சுகாதாரத்துறை, இணைந்து கபரக்குடிநீர் மற்றும் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வழங்குகின்றனர்.
பசுமை தமிழ் தலைமுறை அமைப்பினர், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு இணைந்து வசவப்புரம் சோதனைச்சாவடி, கீழப்புத்தனேரி,மேலப்புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கபசரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு தலைவர் சுகன் கிறிஸ்டோபர் அவர்கள்
கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகள் 10 நாட்கள் கண்டிப்பாக வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும், வெளியில் நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் கலப்படத்தை தவிர்க்க, கபசுர குடிநீர் நிலவேம்பு குடிநீர் சூரணங்களை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் எலுமிச்சை சாறு, கடலை வகைகள்,பருப்பு,மிளகு ரசம் போன்று எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் உணவுகளை எடுக்க அறிவுரை கூறினார்.
தன்னலம் பாராமல் பொதுமக்கள் நலனுக்காக வெயிலில் பொதுமக்களுக்கு வீடுவீடாக கபசரக்குடிநீர் வழங்கியதை பலரும் வெகுவாக பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர்,வேல்முருகன், செல்வம்,கன்னியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.