பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு, சுகாதாரத்துறை, இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு.பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு, சுகாதாரத்துறை, இணைந்து கபரக்குடிநீர் மற்றும் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வழங்குகின்றனர்.


அந்த வகையில் இன்று (28.04.21)பசுமை தமிழ் தலைமுறை அமைப்பினர், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு இணைந்து மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கும் மற்றும் கலியாவூர் பகுதி கிராமத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் கபசரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்நிகழ்வில் வட்டார ஊராட்சி மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கலியாவூர் கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சித்த மருத்துவர் செல்வகுமார் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகள் 10 நாட்கள் கண்டிப்பாக வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும், வெளியில் நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கலப்படத்தை தவிர்க்க, கபசுர குடிநீர் நிலவேம்பு குடிநீர் சூரணங்களை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர், இணைச்செயலாளர்,கலியாவூர் ஊராட்சி துணை தலைவர், k.பரமசிவம்,அழகு மணிகண்டன், தங்கராஜா, ஆகியோர் செய்திருந்தனர்.

56 views0 comments