
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் முகக்கவசம்...






பசுமை தமிழ் தலைமுறை அமைப்பினர், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கும் மற்றும் கீழப்புத்தநேரி பகுதி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் கபசரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார் கலந்து கொண்டு கொரானா தொற்றை தடுப்பு முறைகள் பற்றியும், அதனை எதிர்கொள்வது பற்றியும், நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் பற்றியும் பொது மக்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவன தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர், இணைச்செயலாளர் k.பரமசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.