திருநெல்வேலி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குழிகளை இளைஞர்களே முன்வந்து சீர் செய்தனர்





திருநெல்வேலி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்ப்பட்டு வருகிறது.
பழுதான சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யாமல் அலட்சியம் செய்ததால் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவனர்/தலைவர்
மு.சுகன் கிறிஸ்டோபர் தலைமையில் , பசுமை தமிழ் தலைமுறை அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் ரா.அருண், பே.நவீன், வே.தங்கபாண்டி, செ.சீனிவாசன், ஆகியோர் தானாக முன்வந்து வசவப்புரம் சொதனை சாவடி அருகே சாலையில் உள்ள குழியை சிமெண்ட் கலவை போட்டு சரி செய்தனர்.
இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.