தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்திருக்கும் மத்திய துணை பாதுகாப்பு படை...



தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை பாதுகாப்பு படையினர் இன்று ஒரு தளவாய் தலைமையில் 803 பாதுகாப்பு படையினர் சிறப்பு இரயில் மூலம் மதுரை இரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்கள். பின் அவர்களை அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 406வது பட்டாலியனை சேர்ந்த மத்திய துணை பாதுகாப்பு படையினர் ஒரு உதவி தளவாய் திரு நரேந்திரன்அவர்கள் தலைமையில் 84 பாதுகாப்பு படையினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து இறங்கினார்கள். இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ. மணிவண்ணன் IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் (பொறுப்பு) திரு சுடலைமுத்து அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டு ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நாளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS..அவர்களை உதவி தளவாய் அவர்கள் நேரில் சந்தித்து காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனை பெற்று தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.